நாட்டின் இரண்டாவது திருநங்கை போலீசுக்கு பாலியல் தொல்லை? நஸ்ரியா பரபரப்பு புகார்

தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக துன்புறுத்துவதால் தனது வேலையை ராஜினாமா செய்யப் போவதாக கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளராக இருக்கும் திருநங்கை காவலர் நஸ்ரியா தெரிவித்தார்.

transgender police officer nazriya raise sexual complaint against higher officer in coimbatore

கோவை மாநகர காவல் துறையில் திருநங்கை நஸ்ரியா பணிபுரிந்து வருகிறார். தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் இதற்கு முன்பு ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அவர் கோவைக்கு கடந்த 2020 ம் ஆண்டு மாற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு  திருநங்கை காவலர் நஸ்ரியா இன்று வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''காவல்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து, பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறேன்.  இந்நிலையில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை எனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாக பேசினார். மனரீதியாக டார்ச்சர் செய்தார். எனவே என்னால் இனி காவல்துறையில் பணியில் நீடிக்க  முடியாது. எனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன்'' என்றார்.

திருச்சியில் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய வடமாநில இளைஞர் ஓராண்டுக்கு பின் கைது

இதையடுத்து, நஸ்ரியாவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். அப்போது, நஸ்ரியாவின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு, எழுத்து பூர்வமாக புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். 

கோவை மாநகர ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து, திருநங்கை காவலர் நஸ்ரியா எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். இந்தப் புகாரை  துணை ஆணையர் சந்தீப் விசாரிப்பார் என்றும், ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள புகார்கள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios