திருச்சியில் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய வடமாநில இளைஞர் ஓராண்டுக்கு பின் கைது
திருச்சியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வடமாநிலத்திற்கு தப்பிச்சென்ற நபரை ஒராண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் சினேகா (வயது 22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காதர் அலி(22) சினேகாவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காதர் அலி சினேகாவிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்டு உள்ளார். இதில் கர்ப்பமான சினேகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் காதர் அலி சினேகாவிடம் தெரிவிக்காமல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுள்ளார்.
பொதுத்தேர்வு எழுத ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமா? அமைச்சர் விளக்கம்
இதனால் கர்ப்பம் அடைந்த சினேகா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அசாம் மாநிலத்தை சேர்ந்த காதர் அலி ஏமாற்றி கர்பமாக்கி விட்டார் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படையினர் அலியை தேடி வந்தனர்.
ரூ.100 கட்டணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே சவால் விடும் புதுச்சேரி எலி ஜோதிடர்
இந்த நிலையில் ஓராண்டுக்கு பின் அவர் சொந்த கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று காதர் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.