கோவையில் ரூ.15 கோடி நிறுவனம் கையாடல்; மூவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கோவையில் தொழில் அதிபருக்கு சொந்தமான 15 கோடி மதிப்பிலான நிறுவனத்தை அபகரித்து மோசடியில் ஈடுப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50). அப்பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அவரது பாட்டி பிரேமா, தாயார் சித்ரா பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின் என்பவர் இந்நிறுவனத்தில் இணைந்து போலி ஆவணங்களை தயாரித்து 15 கோடி மதிப்புள்ள இந்நிறுவனத்தை அபகரித்துள்ளார். இந்த மோசடிக்கு அவரது மனைவி ஷீலா(52), மகள் தீட்சா(29), மருமகன் சக்திசுந்தர்(34) ஆகியோர் உதவி புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
வெளி நாட்டில் வேலை, லட்சங்களில் சம்பளம்; பல இளைஞர்களுக்கு வலை விரித்து மோசடி - கோவையில் பரபரப்பு
இது தொடர்பாக சிவராஜ் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அஸ்வினின் மனைவி ஷீலா, மகள் தீட்சா, மருமகன் சக்தி சுந்தரை கடந்த 18ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அஸ்வினை தேடி வருகின்றனர்.
வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை - ராதாகிருஷ்ணன் விளக்கம்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி சுஜித் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து மூவரை போலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.