Asianet News TamilAsianet News Tamil

’திமுக ஆட்சியில் கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தல் அதிகரிப்பு’ - வேலுமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளங்களை தடுத்து நிறுத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

smuggling of mineral increased in dmk government says sp velumani
Author
First Published May 9, 2023, 4:41 PM IST

கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து பல்வேறு திட்டங்களை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். ஆட்சியரிடம் கோவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எடுத்து உரைத்தோம்.

கோவை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை திமுக ஆட்சியில் அதிகமாகி இருக்கிறது. வாளையார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதி வழியாக கனிமவளங்கள் விதிகளை மீறி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அரசிற்கு பணம் செலுத்தாமல் போலியாக இரசீது அடித்து கனிமவளங்கள் கடத்தப்படுகின்றது. திமுக அரசு அதிக நபர்களை நியமித்து பணம் வசூல் செய்து வருகிறது. ஒரு யூனிட்க்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இன்று மோசமான ஆட்சி நடக்கிறது. கனிம வளங்கள் கடத்தி செல்வதை ஏற்க முடியாது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கனிம வளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுப்பு

கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் மீது ஆசிட் வீச்சு, கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல் துறை செயல்படவில்லை. சிறுவாணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேகமாக முடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் எந்த வேலையும் செய்யவில்லை.

அத்திக்கடவு அவிநாசி திட்டம், மேம்பாலங்கள் ஆகிய வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்பு இல்லாததால் 20 கி.மீ. துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையம் சுயநலத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கனிம வளக்கொள்ளையை அரசு தடுக்கவில்லை எனில், மக்களே தடுத்து நிறுத்துவார்கள். காட்டுப்பன்றி, யானை, மயில் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் - நெகிழ்ச்சியில் திழைத்த மாணவி

அதிமுக செய்திகளை பல பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. கோடநாடு பிரச்சனை வெளியே கொண்டு வந்ததே எடப்பாடி தான். எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுகிறோம். பத்திரிகைகள் நடுநிலையாக இருக்க வேண்டும். பத்திரிகைகள் திமுக ஆட்சியை தூக்கிப்பிடிப்பதை கைவிட்டால், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். விஸ்வரூபம் படம் வந்த போது இஸ்லாமியர் மனம் புன்படும்படியாக இருந்த காட்சிகளை நீக்கியது போல, தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios