தெறி விஜய் பாணியில் உ.பி. சாமியாருக்கு எச்சரிக்கை விடுத்த மர்ம நபர்கள்; பொள்ளாச்சி அருகே பரபரப்பு

அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த உ.பி. சாமியாரின் உருவ பொம்மையை பாலத்தில் தொங்க விட்ட சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Panic in Pollachi after mysterious persons hung effigy of UP preacher who threatened to kill Minister Udhayanidhi on bridge vel

அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர் வினையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக உறுப்பினர்கள் அமைச்சர் உதயநிதிக்கு அதரவாகவும், சாமியாருக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆங்காங்கே சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு சம்பவமும் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும் சாமியார் மீது காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

என்கவுண்டருக்கே பயப்பட மாட்டோம்; அரிவாளுடன் வீடியோ - மாணவனை தலையில் தட்டி அனுப்பிய போலீஸ்

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தில் நடுஇரவு  சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு குஷியாக வைப் செய்த கோவில் யானையின் கியூட் வீடியோ

இதனத் தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவப்பொம்மையை காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு காவல் துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios