கமல் சார் எனக்கு காரை பரிசாக வழங்கினாலும் நான் ஒரு டிரைவர் தான் - ஷர்மிளா பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனக்கு காரை பரிசாக வழங்கினாலும் தற்போது நான் ஓட்டுநர் தான் என்று கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

mnm president kamal haasan gifted a car to lady bus driver sharmila in coimbatore

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கடந்த மாதம் சொகுசு கார் வழங்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் கூறிருந்தார். அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் பிளமேட்டில் உள்ள மகேந்திர கார் ஷோரூமில் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மகேந்திர மராசோ காரினை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பொதுச்செயலாளர், தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று இந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

அடுத்த மூன்று வருடத்தில் பெரிய தொழில் முனைவோராக வர வேண்டும் என்று கூறினார். கமல் பண்பாட்டு மையம் மூலமாக இந்த கார் பரிசளிக்கப்பட்டதாகவும், ஷர்மிளாவை கமலஹாசன் தனது மகள் போல் பார்த்துக் கொள்வார் என்று உறுதி அளித்துருப்பதாக கூறினார். திறமை மிக்கவர்களை கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து கமல் பண்பாட்டு மையம் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பாக Skill Development centre தமிழ்நாட்டில் வருவதாக ஆரம்பித்து அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் படி உள்ளதாக கூறினார்.

ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; அமைச்சர் சேகர்பாபு உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

2024 மற்றும் 2026 தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினை கட்டமைத்துக் கொண்டிருப்பதாகவும் 234 தொகுதிகளுக்கு செயலாளர்கள் நியமித்து தொகுதியை கண்காணிக்க இருப்பதாக கூறினார். 

சொகுசு பங்களாவில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை; சிசிடிவியில் பதிவான காட்சிகளால் பரபரப்பு

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா, தற்போது இந்த காருக்கு நான் ஓட்டுநர் மட்டுமே. இன்னும் பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெற்று பின்னர் நான் முதலாளியாக மாறுவேன். கமலஹாசன் எனக்கு அப்பா போல் உதவி செய்துள்ளார். தொழிலில் வெற்றி பெற்று அடுத்த காரின் சாவியை நடிகர் கமலஹாசன் கையில் தான் வாங்குவேன் என்று உறுதியளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios