Asianet News TamilAsianet News Tamil

திராவிட மாடல் ஆட்சி சிலருக்கு வயிற்று எரிச்சலை -ஏற்படுத்தி உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திராவிட மாடல் ஆட்சி சிலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

minister senthil balaji provide welfare assistance to 980 people in coimbatore
Author
First Published May 10, 2023, 7:39 AM IST

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில்  மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்விதுறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளிட்ட துறை சார்பாக 980 பேருக்கு 1116.97 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர். முன்னதாக அனைத்து துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்ததை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இரண்டு ஆண்டு காலத்தில்  இந்த வார்டில் மட்டும் மூன்றரை கோடிக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதே போல் கோவை மாநகரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோவையில் தென்னையை பதம் பார்த்து, இளநீரை ருசி பார்த்த ஒற்றை காட்டு யானை

தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பில் நல திட்டம் வழங்க உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி மீது சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம். 

திருவாரூரில் அரசு நகர பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து கோர விபத்து

ஐடி நிறுவனம் பெங்களூருக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக்சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது. இரண்டு ஆண்டு சாதனையை தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும். அதில் மகளிர் இலவச பேருந்து, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios