Asianet News TamilAsianet News Tamil

கோவையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் விடுதியில் தற்கொலை

கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man commits suicide for online betting loss in coimbatore
Author
First Published Apr 15, 2023, 2:54 PM IST | Last Updated Apr 15, 2023, 2:54 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (வயது 35 ). இவர் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியதாக விடுதி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 2 மணிக்கு தனது அறையை காலி செய்ய வேண்டும். அவ்வாறு காலி செய்யாத பட்சத்திரும் விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறையை காலி செய்வதற்கான நேரத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஆனால், அவர் அதுபோல தகவலும் தெரிவிக்கவில்லை, அறையையும் காலி செய்யவில்லை. இது தொடர்பாக விடுதி மேலாளர் சபாநாயகத்தை செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்தது. இதனைத் தொடர்ந்து விடுதி ஊழியர் அறையின் கதவை தட்டியுள்ளார். யாரும் கதவை திறக்காத நிலையில் மாற்று சாவியை பயன்படுத்தி அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

கணவனை இழந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு; காதலி வீட்டில் இளைஞன் தற்கொலை

அப்போது சபாநாயகம் கழிவறை அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாபதியை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் உயிரிழந்து ஐந்து மணி நேரம் ஆகலாம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக C4 காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டது. முதல்கட்ட விசாரணையில்  கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனவேதனையில் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞரை அடித்து கொன்று மண்ணில் புதைத்த மர்ம நபர்கள்; காவல்துறை விசாரணை

கிரிக்கெட் சூதாட்டத்தில் சபாநாயகம் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios