Asianet News TamilAsianet News Tamil

கணவனை இழந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு; காதலி வீட்டில் இளைஞன் தற்கொலை

திருவாரூர் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த ஒருதலைக் காதலன் காதலியின் வீட்டில் தூக்கிற்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young man commits suicide in girlfriend's home in thiruvarur
Author
First Published Apr 15, 2023, 11:46 AM IST | Last Updated Apr 15, 2023, 11:46 AM IST

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் ரெஜினா பேகம் (வயது 34). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சையது உசேன் இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் சையது உசேனின்  நண்பர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் திருமணமாகி மனைவி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் ரெஜினா பேகத்தின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செல்வகணபதி செய்து வந்துள்ளார். அந்த அடிப்படையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ரெஜினா பேகத்தின் உறவினர்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட ஜமாத்தாரிடம் தான் ரெஜினா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஜமாத்தாரும் உறவினர்களும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல்; காவல் நிலையம் சூறையாடல், போக்குவரத்து நிறுத்தம்

இந்த நிலையில் ரெஜினா பேகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். மேலும் செல்வகணபதியின் செல்போன் அழைப்புகளை அவர் தொடர்ந்து எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த செல்வ கணபதி நேற்று இரவு திரு.வி.க நகரில் உள்ள ரெஜினா பேகத்தின் வீட்டின் போர்டிகோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சேலத்தில் கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டி நடிகை நிக்கி கல்ராணி

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று செல்வகணபதியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios