Asianet News TamilAsianet News Tamil

ஒருவாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம்... எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!!

கோவையில் ஒருவாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

If the roads are not repaired within a week we will go on protest says sp velumani
Author
First Published Nov 14, 2022, 8:59 PM IST

கோவையில் ஒருவாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இதுவரை எந்த வேலையும் பார்க்கவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன். ஒரு வாரத்தில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரம் போராட்டம் நடத்தப்படும். 2011 ஆண்டுக்கு பின் திருச்சி, பாலக்காடு சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்... பாஜக மேலிட பொறுப்பாளர் அதிரடி!!

ஆனால் கோவையில் நடைபெற்ற பாலத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது மாநகராட்சிக்கு வருமானம் அதிகமாக வருகின்றது.  சாலை பணிகளை துவங்க வேண்டும் இந்த சாலைகள் ஒரு வாரத்தில் போடப்பட வேண்டும். இல்லை எனில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நான் அமைச்சராக இருந்த போது என்னுடன் எத்தனை அதிகரி இருப்பார்கள். இப்போது யாரும் இல்லை. நான் எம்.எல்.ஏ தான் ஆனாலும் மக்களுக்கு பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். மக்கள் எங்கே திமுகவை பாராட்டுகின்றனர் என தெரியவில்லை.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

யாருக்குமே இங்கு நல்லது பண்ணவில்லை. ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்டத்தில் இருக்கும் சாலைகள் சரி செய்யப்பட வில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் . சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.  நன்றாக கூட மழை பெய்ய வில்லை. இந்த அரசு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios