அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்... பாஜக மேலிட பொறுப்பாளர் அதிரடி!!

அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகள் குறித்து முழு தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் கே.பி.இராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

white paper is required for power connections provided in aravakurichi says kp ramalingam

அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகள் குறித்து முழு தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் கே.பி.இராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு ஆகியவற்றினால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிய நிகழ்ச்சியில் 50 ஆயிரம் நபர்களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கவில்லை. அதில் ஒரு புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது. அந்த பயனாளிகளில் விசாரணைக்காகவும், தட்கல் முறையில் சுமார் 2.50 லட்சம் பணம் கட்டியவர்களும் அடங்குவர். ஆகவே, முழு தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கையினை தர வேண்டும்.

இதையும் படிங்க: பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

மத்திய அரசின் திட்டங்களில், தமிழக திமுக அரசு தனது ஸ்டிக்கர் ஒட்டி நாடகமாடுகின்றது. ஆகவே, இதற்கு ஒரு சர்ட்டிபிகேட் முதல்வர் வந்து கொடுக்கின்றார். இதே செந்தில்பாலாஜியை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். மணல் திருடன், பல கட்சிகள் மாறியவர் என்றெல்லாம், கூறிய வீடியோக்களின் பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றமே குற்றவாளி என்ற கோணத்தில் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யலாம் என்று சொல்லி உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது கூட ஒரு மனுக்களை திமுக அரசு போட்டுள்ளது. அதனை கூட உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

ஆகவே, இந்த வழக்கிற்கு மூலக்காரணமே மு.க.ஸ்டாலின் தான், அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முழு பொறுப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. தமிழகத்தில் வெள்ள வடிகால் பணிகள் முழுமையாக செய்துள்ளதாகவும், முழுமையாக செய்து விட்டதாகவும் தெரிவித்தார். சென்னையும் சரி மற்றும் பல்வேறு பகுதிகளில் படகு ஓட்டும் பணி தீவிரமடைந்து வருகின்றது. மேலும், நேற்று கொளத்தூர் பகுதியில் தமிழக முதல்வரை செய்தியாளர் ஒருவர் வெள்ளத்தினை பற்றி கேள்வி கேட்ட போது, அதற்கு மிரட்டும் தோனியில் பேசிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. ஊடகங்கள் மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களிலேயே மிகவும் வைரலாகி வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios