பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !
பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாளை (15.11.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட் ஆவின் பால், அட்டைதாரர்களுக்கு லிட்டர் 37 ரூபாய்க்கும், சில்லறை விலையாக ரூ.40-க்கும் கொடுக்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட் பால், அட்டைதாரர்களுக்கு 42 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 43 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்த இரண்டு பாலின் விலையிலும் எந்த மாற்றமும் இப்போது செய்யப்படவில்லை. ஆனால், 6% கொழுப்புச் சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பிரீமியம் பாலின் சில்லறை விலை தற்போது லிட்டர் 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது, அட்டைதாரர்களுக்கு வழக்கமான 46 ரூபாய் விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !
அதுபோல 6.5% கொழுப்புச் சத்து நிறைந்த சிவப்பு நிற டீமேட் பாலின் விலையானது லிட்டர் 60 ரூபாயிலிருந்து, ரூபாய் 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பிரவுன் நிற ‘கோல்ட்’ பாலின் விலையானது லிட்டர் 47 ருபாயிலிருந்து 56 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெய், பால்பவுடர், பட்டர் போன்ற பால் பொருட்களின் விலை மார்ச் மாதமே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பாலின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பால்விலை உயர்வுக்கு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பச்சை குழந்தை முதல் முதியோர் வரை பாமர மகக்ள் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான் பொருளான பால் விலை ஏற்றப்பட்டிருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது. வரும் 15ம் தேதி 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?