கோவையில் பழமை வாய்ந்த கோயிலை இடித்த மாநகராட்சி அதிகாரிகள்… இந்து முன்னணியினர் கண்டனம்!!

கோவையில் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

hindu munnani condemned for  corporation officials demolished an ancient temple in coimbatore

கோவையில் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் கோவில் இருந்தது. இந்த கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் வைத்து இடித்து அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடரும் மாணவர்களின் ஆப்சென்ட்... இன்றைய தேர்வுக்கும் 49 ஆயிரம் பேர் வரவில்லை!!

மேலும் கோவிலின் அருகில் இருந்த சந்தன மரத்தையும் வெட்டி எடுத்து சென்றனர். இதற்கு இந்து முன்னணியினர் தங்கள் கண்டங்களை தெரிவித்தனர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியினர், கோவையில் பல்வேறு இடங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங். எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் கங்கிரஸ் கட்சியினர்!!

அதே போல 25ஆண்டுகால சந்தன மரத்தை வனத்துறையின் அனுமதி இல்லாமல் வெட்டியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் மாநகராட்சி ஈடுபட்டால் இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios