காங். எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் கங்கிரஸ் கட்சியினர்!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ்-ன் செயல்பட்டால் ஈரோட்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது… டிடிவி தினகரன் கருத்து!!
தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்… வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு!!
இதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.