தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்… வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு!!
கன்னியாகுமரியில் பாதிரியார் ஒருவர் தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலியல் தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் பாதிரியார் ஒருவர் தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலியல் தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 29 வயதான பாதிரியார் ஒருவர், தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் வாட்ஸ் அப் மூலம் பேசி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் அவர்களுடன் ஆபாசமாக பேசி அவர்களுடன் நெருக்கமாக பழகி அதனை வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். பாதிரியரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். அவரது வலையில் இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுமிகளும் சிக்கியுள்ளனர். அதில் ஒரு இளம்பெண்ணை மிரட்டும் போது அவர் பாதிரியாரை நேரில் சந்தித்து தன்னுடன் பேசிய சாட்டிங்கை அழிக்க சொல்லும் போதுதான் பாதிரியார் பல பெண்களுடன் ஆபாசமாக பேசியதும் பலரது வீடியோக்களை செல்போனில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டம் முழுவதும் சமூக வலை தளங்களில் பாதிரியார், இளம்பெண்களுடன் செய்த ஆபாச சாட்டிங், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அறிவுரை கூறிய தாய்; கழுத்தை நெறித்துக் கொன்ற முன்னாள் காவலர்: மதுவால் சீரழிந்த குடும்பம்
அதில் இளம்பெண்களுடன் பாதிரியர் ஆபாச சாட்டிங் செய்தது, முத்தம் கொடுப்பது என பல காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இவை அனைத்தும் இணையத்தில் வைரலானது. இதை அடுத்து அந்த பாதிரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் வெளியானதை அடுத்து பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே பாதிரியாரால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ஆலந்தட்டுவிளையை சேர்ந்த மினி அஜிதா என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், எனது மகன் ஆஸ்டின் ஜியோ. தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்கிறார். அதே கல்லூரியில் பிலாங்காலையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவரும் படிக்கிறார். இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இதன் மூலம் எங்கள் குடும்பத்துக்கும் அந்த மாணவி அறிமுகமானார். இந்தநிலையில் கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு எனது மகனின், தோழியான அந்த மாணவி மற்றும் அவரது அக்கா இருவரும் என்னை போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தங்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் கூறி அழுதனர். இதனையடுத்து எனது இரு மகன்களுடன் அவர்களை சந்திக்க சென்றேன். அப்போது அவர்கள் இருவரும் தாங்கள் வழிபாட்டிற்கு செல்லும் திருச்சபையின் பாதிரியார், செல்போனில் ஆபாசமாக சாட் செய்வது வீடியோ கால் செய்வது குறித்து கூறினர்.
இதையும் படிங்க: தொழிலதிபரிடம் போலீஸ் அதிகாரி போல நடித்து ரூ.1.75 கோடி அபேஸ்! காதலியுடன் சொகுசு வாழ்க்கை!
மேலும் தங்களை தனி அறைக்கு வர வேண்டும் என்று பாலியல் ரீதியாக அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாதிரியாரை சந்தித்து இப்படி நீங்கள் நடந்து கொள்ளலாமா? என்று கேட்டோம். அவரது தவறை ஒப்புக்கொண்ட பாதிரியார், எனது செல்போனில் பதிவு செய்த ஆபாச பதிவுகளை அழித்துக் கொள்ளுங்கள் என எனது மகனின் தோழியிடமே கொடுத்தார். அந்த செல்போனை பார்த்த போது மேலும் பல சிறுமிகள், பெண்களிடம் பாதிரியார் தகாத உறவு வைத்திருந்ததும், அது தொடர்பான பதிவுகளும் இருந்தன. இதில் சபையில் முக்கிய பொறுப்பில் உள்ளவரின் மகளும் பாதிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது. மத போதனை செய்யும் பணியில் இருந்து கொண்டு இவ்வாறு பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கலாமா? என்று அவரை திட்டியதுடன், ஆபாச பதிவுகளை அழித்து விடுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவ்வாறு செய்யாமல் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து தலைமறைவான பாதிரியாரை காவல்துறையினர் தேடிப் வருகின்றனர்.