அறிவுரை கூறிய தாய்; கழுத்தை நெறித்துக் கொன்ற முன்னாள் காவலர்: மதுவால் சீரழிந்த குடும்பம்

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மது போதைக்கு அடிமையான மகனுக்கு அறிவுரை கூறிய தாயை முன்னாள் காவலர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mother killed by her own son in ranipet district

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வானீஸ்வரி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் மூத்த மகனான ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தினேஷ் காவல்துறையில் பணியில் சேர்ந்து அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லாத காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினேஷீக்கு  திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் மது போதையில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது மனைவி அவரை பிரிந்து ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் வானீஸ்வரி தன் இரண்டாவது மகனான தினேஷுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

mother killed by her own son in ranipet district

இந்த நிலையில் நேற்று தினேஷ் அதிக அளவில் மதுகுடித்துவிட்டு தனது தாய் வானீஷ்வரிடம் அதிக தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் குடிபோதையில் இருந்த தன் மகனுக்கு அறிவுரை கூறிய வாணீஸ்வரியை கண்டு ஆத்திரமடைந்த தினேஷ் தன் தாயை இரவு முழுவதும் கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தன் தாய் இறந்து விட்டார் என்று அறிந்ததும் கதவை பூட்டி வைத்து காலை முதலே தினேஷ் வீட்டின் அருகாமையில் அமர்ந்து குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் வாணீஸ்ரியும் அவரது மகளான பிரியாவும் நாள்தோறும் இரவு நேரத்தில் செல்போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று ப்ரியா தன் தாய்க்கு செல் போன் வாயிலாக அழைத்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை ஏற்றுவதில் தகராறு பஸ்டாண்டில் தாக்கிக்கொண்ட ஓட்டுநர்களால் பரபரப்பு

ஆனால் அவரது தாய் செல்போனை எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்து இன்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் விடாமல் தினேஷ் தடுத்துள்ளார். பிறகு அவரை மீறி வீட்டிற்குள் சென்ற ப்ரியா அவரது தாய் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தினேஷ் தப்பித்து ஓடி உள்ளார். காவல் துறையினரிடம் நடந்தத சம்பவம் குறித்து பிரியா தெரிவித்ததைத் தொடர்ந்து தப்பித்து ஓடிய தினேஷை காவல் துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ

மேலும் இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios