ஈபிஎஸ்-ன் செயல்பட்டால் ஈரோட்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது… டிடிவி தினகரன் கருத்து!!
ஒரு அணியில் இணைந்தால் தான் திமுக என்னும் தீய சக்தியை வெற்றி பெற முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒரு அணியில் இணைந்தால் தான் திமுக என்னும் தீய சக்தியை வெற்றி பெற முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களது கட்சி ஆறு ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு காரணம் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தான். அம்மாவின் மறைவிற்கு பின்னர் கூட எனது சித்தியின் முன்னெடுப்பால் அதிமுக நிலைத்திருந்தது. அதேபோல எங்களது சித்தி கூட முதல்வராக வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் தற்கொலைப் படைகளாக மாறுவார்கள் - எம்.எல்.ஏ. ரவி பேச்சு
ஆனால் ஓபிஎஸ் சிலர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர் கூட இப்போது அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் ஒன்றிணைந்து தீய சக்தி திமுகவை எதிர்க்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் மாறி இருக்கிறார். இப்போது இரட்டை இலை இருப்பதனால் தான் அதிமுக கட்சி இருப்பதே தெரிகிறது. அப்படி இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக என்னும் தீய சக்தியை அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒரு அணியில் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.
இதையும் படிங்க: காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் அதிகரித்த மாணவர்களின் வருகை... ஆய்வறிக்கை வெளியிட்டார் பழனிவேல் தியாகராஜன்!!
எடப்பாடி தன் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுகவுடன் சமரசம் செய்கிறார். அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாக ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முடிவு எடுக்கும் கட்சியாக மாற்றி உள்ளார். அதனால் இரட்டை இலை பலவீனம் அடைந்து வருகிறது. திமுக மக்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்தாலும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பட்டால் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர் என்ற் தெரிவித்துள்ளார்.