12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட தேர்வை சுமார் 49 ஆயிரம் பேர் எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட தேர்வை சுமார் 49 ஆயிரம் பேர் எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் தேர்வான மொழிப்பாடங்களுக்கான தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை... புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!!

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வை சுமார் 49 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தேர்வுக்கு வராத மாணவர்கள் தமிழ் பட தேர்வுக்கு வராத மாணவர்கள் தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்… வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு!!

மேலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர் என்றும் இதனால் அவர்கள் 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாட தேர்வுகளையும், 12 வகுப்பு பாட தேர்வுகளையும் சேர்த்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களில் பெருபாலானோர் பள்ளிகளுக்கே வராத சூழலில் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்பதால் இவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.