தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் நடைபெறும் அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் நடைபெறும் அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட தொகையான கணக்கில் வராத 1,26,000 ரூபாய் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளை ஏற்றுவதில் தகராறு பஸ்டாண்டில் தாக்கிக்கொண்ட ஓட்டுநர்களால் பரபரப்பு
இதேபோல் திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2 இல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னேரி சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாகை வட்டாச்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சி காவல்நிலையத்திற்குள் மோதல்... அமைச்சர் நேருவின் ஆதரவாளர் கைது; 4 பேர் காவல்நிலையத்தில் சரண்!!
கடலூர் மாநகராட்சியில் வீட்டுவரி, தண்ணீர் வரி, கடை வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் ஒப்பந்த பணி உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் வாங்கபடுவதாக வந்த புகாரை அடுத்து அறை கதவுகள் மூடப்பட்டு சோதனை நடைபெறுகிறது. சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அலுவலகத்தின் அறையை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
