கிறிஸ்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகள் முன்பாகவே கோள்களின் நிலையை கண்டறிந்து பஞ்சாங்கத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதுபோன்ற இந்தியாவின் பழமையை இன்றைய இளைஞர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19 வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,நமது நாடு பல்வேறு வகைகளில் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய பாரதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

தற்போதைய மத்திய ஆட்சியில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த வகையில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்கு முன்பு மொழி, கலாசாரம் மற்றும் இடம் சார்ந்து பல்வேறு வேறுபாடுகள் இருந்ததால் வளர்ச்சி தடைப்பட்டது. ஆனால் இன்று இந்தியா ஒரே நாடு என உணரப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதுடன் வீடில்லாத நிலை மாற்றப்பட்டு அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது.

மனைவின் நடத்தையில் சந்தேகம்; மகளை கொலை செய்த கொடூர தந்தை கைது

இதற்கு முன்பு அரசாங்கம் மட்டுமே வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டது. அரசாங்கத்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது அனைவரும் ஒன்றிணைந்து, குறிப்பாக அனைத்து பிரிவு மக்களும் ஒருங்கிணைந்து வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக நாட்டு பணிகள் மேற்கொள்ளபட்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றது.

நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்களை நம்புவது அவசியம். குறிப்பாக இளைய தலைமுறையினர் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு குறைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 700க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இவை மட்டுமின்றி விண்வெளி ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள், எடை குறைவான சிறிய ரகசெயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளனர். 

குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாணவர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இதுதான் நமது நாட்டின் இளைஞர் சக்தி எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த அரசு மகளிர் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, வேட்டி பஜார், பேட்டி பஜாஜ் போன்ற திட்டங்களின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்த அவர், தற்போது ராணுவத்திலும் மகளிருக்காண வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்று உலக நாடுகள் இந்தியாவை பல்வேறு விஷயங்களிலும் எதிர்நோக்கி உள்ளது, குறிப்பாக பெருந்தொற்று காலகட்டத்தில் உலகமே செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில், நமது நாட்டு விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை சிறப்பான முறையில் மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்தனர். இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு நன்றிகளை செலுத்த வேண்டும். மற்ற நாடுகள் தடுப்பூசிகளை வியாபாரம் ஆக்கிக் கொண்டிருந்த நிலையில் , நமது நாட்டில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டதோடு அதை பெரு நாடுகளுக்கும் வழங்கி வந்தோம்.

உலகத்தையே நமது குடும்பமாக நினைப்பது நமது அடையாளம். காலநிலை மாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகி வரும் சூழலில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகிறது எனவும், இந்தியா சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்று சக்தி களுக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

2016 ஆம் ஆண்டு இந்தியா முன்னெடுத்த சூரிய சக்தி, சர்வதேச சூரிய சக்தி ஒப்பந்தத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பல நாடுகளும் ஒத்துழைக்காத நிலையில் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பல நாடுகளும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.

இந்தியா வளமான நாடு என்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது, ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா செழுமையாக இருந்தது, காலணி ஆதிக்கத்தின் பிறகு இந்தியாவின் செல்வங்கள் போனபின், வருமானமில்லாத நாடாக மாற்றப்பட்டது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதோடு, நமது பண்பாடு, கலாசாரம், ஆகியவற்றை பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிறிஸ்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகளுக்கு முன்பு கோள்களின் நிலையை கண்டறிந்து பஞ்சாங்கத்தை உருவாக்கி சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை சரியாக கணித்திருந்தனர். இதுபோன்று இந்தியாவின் பழமையை, இன்றைய இளைஞர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நீங்கள் மாணவர்களாக இருக்கலாம், நாளை வேலை தேடுபவர்களாகவும் பல துறைகளில் பணிபுரிபவர்களாகவும் வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாகவும் உருவாக போகின்றீர்கள். எனவே இதனை உணர்ந்து மன உறுதியோடு தன்னம்பிக்கையாக பெரிய கனவுகளை காண வேண்டும். கனவுகள் காண்பதோடு மட்டுமில்லாமல் கடின உழைப்பின் மூலம் கனவுகளை அடைந்து நாட்டிற்கும் உங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்கள் மத்தியில் பேசினார்.