குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தற்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான், மகன் இறந்த சோகத்தில் தந்தையும் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(40), மரவேலை செய்து வந்தார். இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும் நவீன் குமார் அதிகமாக செல்போனில் விளையாடியதை அவரது தந்தை சுந்தர் கண்டித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அறையில் சென்று பார்த்த போது நவீன் குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் நவீன் குமாரின் உடலை மீட்டு இறுதிச் சடங்குக்கான வேலைகளை செய்து வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி உற்சவம்; 108 வீணை இசை வழிபாடு
தொடர்ந்து சோகத்தில் இருந்த சுந்தர் தன்னால் தனது மகன் இறந்து விட்டான் என்ற சோகத்தில் கத்தியால் தனது கையை அறுத்து கொண்டும், பின்பு அதே கயிற்றில் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த முத்தாரம்மன்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,. மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.