கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது

கோவை மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ganja selling persons arrested in coimbatore

தமிழகம் முழுமுவதும் கஞ்சா, பான்மசாலா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!

அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ராக்கிபாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரவி(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இதே போல் துடியலூர், கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் உதயச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’.. 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது.. 4,023 வங்கிக்கணக்குகள் முடக்கம்

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios