விடிய விடிய பெய்த மழை! வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வால்பாறை தாலுகாவில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore collector announced Holiday for schools in Valparai taluk

வால்பாறையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள கூழாங்கல், நடுமலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழக அரசின் உத்தரவுப்படி, மாநில பேரிடர் மீட்பு படையினர் 100 பேர் வால்பாறையில் முகாமிட்டு உள்ளனர். மிதவை படகுகள் முதலிய மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய போலீஸ்

Coimbatore collector announced Holiday for schools in Valparai taluk

இதனிடையே, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட தாமதமாகியுள்ளது. கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும்போது, சோலையாறு அணைக்கு நீர்வரத்து வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள அபாயம் உள்ள ஆற்றங்கரை ஓர பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நிவாரண முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெடுபிடியை கூட்டிய எலான் மஸ்க்! ட்விட்டர் போன்ற புதிய செயலியை அறிமுகம் செய்யும் மெட்டா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios