மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய போலீஸ்
மணிப்பூரில் ஆயுதக் களஞ்சியத்தை கொள்ளையடிக்கும் முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் தௌபால் மாவட்டத்தில் உள்ள 3வது இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) ஆயுதக் களஞ்சியத்தில் ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தனர்.
NH-2 சாலையில் தடைகளை விலக்கிக்கொண்ட பின், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுராசந்த்பூரில் குக்கி போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ஆயுதக் களஞ்சியத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இம்பாலில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள வாங்பாலில் உள்ள ரிசர்வ் பட்டாலியன் முகாமில் நுழைய முயன்ற கும்பல், பாதுகாப்புப் படை வீரர்களை கற்களை வீசித் தாக்கியது.பதிலுக்கு முதலில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், பின்னர் கொள்ளை கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டினர்.
ஹோட்டலுக்குள் புகுந்த லாரி! மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை நடந்த கோர விபத்தில் 15 பேர் பலி
தௌபால் மாவட்டத்தில் உள்ள 3வது இந்திய ரிசர்வ் பட்டாலியனின் ஆயுதக் களஞ்சியத்தை செவ்வாய்க்கிழமை தாக்க முயன்ற கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த 27 வயது இளைஞர் பலியானார். அவர் தௌபாலில் உள்ள ஹெய்ரோக்கைச் சேர்ந்த அபுஜாம் ரொனால்டோ என்று தெரியவந்துள்ளது. தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இம்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தைத் தடுக்கும் முயற்சியில், இம்பால்-மோரே தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக் குழுவினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நேரம் 5 மணிநேரமாகக் குறைக்கப்பட்டதை அடுத்து தடுப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
கடந்த வார இறுதியில் பிஷ்ணுபூர் - சுராசந்த்பூர் எல்லையில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆயுதக் களஞ்சியத்தை கொள்ளையடிக்கும் முயற்சி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
4 மாநிலங்கள்.. 5 நகரங்கள்.. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி