Asianet News TamilAsianet News Tamil

கெடுபிடியை கூட்டிய எலான் மஸ்க்! ட்விட்டர் போன்ற புதிய செயலியை அறிமுகம் செய்யும் மெட்டா!

ட்விட்டரில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மெட்டா நிறுவனம் Threads என்ற புதிய செயலியை ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது.

As Musk's Twitter Brings Limits, Meta's Microblogging App Set For Launch
Author
First Published Jul 4, 2023, 3:45 PM IST

ட்விட்டர் சமூக ஊடகத் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்று கெடுபிடியான விதிமுறைகளை அறிவித்ததை அடுத்து திரெட்ஸ் (Threads) என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா Threads செயலியை ஜூலை 6ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலிலும் தங்களுக்குப் பிரியமான கணக்குகளை பின்தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் உள்ள அதே பயனர் பெயரை  (Username) வைத்திருக்கவும் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டின் பார்ட்னர் ஆக விரும்பும் சிங்கப்பூர்! 'பிளான் 5 எக்ஸ்' முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டம்

As Musk's Twitter Brings Limits, Meta's Microblogging App Set For Launch

TweetDeck ஐப் பயன்படுத்த கணக்கு சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும், ட்விட்டர் கணக்கு இல்லாமல் ட்வீட்களை பார்க்க முடியாது என பல்வேறு பயன்பாடுகளுக்கு ட்விட்டர் கட்டுப்பாடுகளை அறிவித்ததைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தரவுத் திருட்டை சமாளிக்க எலான் மஸ்க்கின் சமீபத்திய அறிவிப்புகள் ட்விட்டர் பயனர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ட்விட்டருக்கு கடுமையான பின்னடைவைத் தூண்டியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் கடந்த மாதம் ட்விட்டர் சிஇஓ ஆக பொறுப்பேற்ற லிண்டா யாக்காரினோவின் நிர்வாகத்தின் மீது விமர்சனக்களுக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த த்ரெட்ஸ் செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி எப்போது அறிமுகம் செய்யப்படும் என மெட்டா எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Follow Us:
Download App:
  • android
  • ios