தமிழ்நாட்டின் பார்ட்னர் ஆக விரும்பும் சிங்கப்பூர்! 'பிளான் 5 எக்ஸ்' முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டம்
2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 மடங்கு அதிக முதலீடுகளை செய்ய பிளான் 5 எக்ஸ் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது சிங்கப்பூர் அரசு.
சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் ஆக செயல்பட தயாராக இருப்பதாவும் தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க இருப்பதாவும் சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அந்நாட்டுக்குச் சென்றுவந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!
இந்த 9 நாள் பயணத்தில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் 2024ஆம் ஆண்டு நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறும் வரவேற்றிருக்கிறார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு மே 31ஆம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த பயணத்தின் மூலம் குறைந்தபடசம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டிருப்பதாவும் அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி இருந்தார்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்பார்ட்னராக இணைய சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது.
கவனிச்சீங்களா பிரதமர் மோடி என்ன திட்டம் போட்டு இருக்கிறாருன்னு; கட்சியினருக்கு இதுதான் கட்டளை!!
சிங்கப்பூர் அரசு முதல் நாடாக மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. அத்துடன் பார்ட்னராக இருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளைச் செய்யவும் சிங்கப்பூர் அரசு முடிவு செய்திருக்கிறது. சராசரியை விட 5 மடங்கு அதிக முதலீடுகளை செய்வதற்கு பிளான் 5 எக்ஸ் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.
சென்ற இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அதிக தொழில்துறை முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ மொபைல் உபகரணங்கள் உற்பத்தியிலும் சென்னை முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் கார், பைக் உற்பத்தி ஆலைகள் உள்ளன. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்திருக்கிறது.
என் குடும்பத்தை விட்டுருங்க... முறைகேடு குற்றச்சாட்டை மறுக்கும் சிங்கப்பூர் அமைச்சர்