கவனிச்சீங்களா பிரதமர் மோடி என்ன திட்டம் போட்டு இருக்கிறாருன்னு; கட்சியினருக்கு இதுதான் கட்டளை!!
2024ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2047ஆம் ஆண்டை நோக்கி பாஜகவினர் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி திங்கள்கிழமை தனது அமைச்சர்கள் குழு சந்தித்து கலந்துரையாடினார். அப்போது 2024ஆம் ஆண்டுக்கு அப்பால் தங்கள் கவனத்தை மாற்றி, இந்தியா சுதந்திரம் அடைந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டை நோக்கி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரகதி மைதான மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், 2047ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகள் நாட்டின் அமிர்த காலம் என்று கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் - 2047 க்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும், உயர் கல்வியறிவு பெற்ற பணியாளர்களின் தோற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா சாட்சியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்தது தான் காரணம்: ரயில்வே ஆணையம் அறிக்கை
வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல செயலாளர்கள் இந்த சந்திப்பின்போது பேசினர். அனைத்து அமைச்சகங்களும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சி பாதை குறித்த தங்கள் திட்டத்தை வழங்கின.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அதில் கலந்துகொண்ட அமைச்சர்களின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, "அமைச்சர் குழுவுடனான பயனுள்ள சந்திப்பில் பல்வேறு கொள்கைகள் தொடர்பான கருத்துகளை நாங்கள் பரிமாறிக்கொண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகடு ஆட்சியில் பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளதாகவும், அடுத்த ஒன்பது மாதங்களுக்குப் பணிகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க தனது அமைச்சர்கள் குழுவைக் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். அந்தந்த அமைச்சகங்களின் 12 முக்கிய சாதனைகள் மற்றும் திட்டங்களைக் குறிப்பிட்டு காலண்டர் உருவாக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆளும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன் மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்பட்டுகிறது.
என் குடும்பத்தை விட்டுருங்க... முறைகேடு குற்றச்சாட்டை மறுக்கும் சிங்கப்பூர் அமைச்சர்