Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 38 எம்.பி.களால் எந்த பயனும் இல்லை - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் தமிழகத்திற்கு தலை குணிவை ஏற்படுத்துவதாகக் கூறி கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

aiadmk protest against drugs smuggling in coimbatore vel
Author
First Published Mar 4, 2024, 6:09 PM IST

திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகி 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள். 

திருப்பூரில் நலத்திட்ட பொருட்களுக்காக மேடையை போர்க்களமாக்கிய இளைஞர்கள்; அதிமுக கூட்டத்தில் கும்மாங்குத்து

தமிழகத்தில் மாணவர்களையும், இளைஞர்களையும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். திமுக பொறுப்பாளர்களும் கஞ்சா விற்கிறார்கள். கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை. விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு உள்ளது. திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான். மேலும் 38 எம்பிகளும் தெண்டமாக இருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை. 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயித்த 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யாமல் தெண்டமாக உள்ளார்கள். 

தேர்தல் கூட்டணிக்காக புறா, காக்கா, கழுதை என எல்லா தூதையும் அனுப்பியாச்சி - மன்சூர் வேதனை பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள். திமுக அரசு மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள். அது திமுக குடும்ப பணம் இல்லை, உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கொடுப்பார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் நினைக்கின்றனர். 

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கும் போடப்படும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போகி விடும். அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios