கோவையில் வனத்துறையினரின் வாகனத்தை பந்தாடி உயிர் பயத்தை காட்டிய ஒற்றை காட்டு யானை
கோவையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறையினரின் வாகனத்தை தூக்கி எறிந்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை,போளுவாம்பட்டி, கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக யானை, உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும்.
தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி வருகின்றன. மேலும் கோயம்புத்தூர் வனச்சரகம் மற்றும் மதுக்கரை வனச்சரகத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள கிராம பகுதிக்குள் நுழைந்து வருகிறது.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் நேற்று இரவு மதுக்கரை வனச்சரகம் ஆலந்துறை பகுதியில் ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுவாணி - கோவை சாலையை நோக்கி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனக் காப்பாளர்கள் சந்திரிகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டச் சென்றனர்.
அப்போது ஆலந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் வனத்துறையினர் யானையை தேடிக்கொண்டிருந்த போது திடீரென புதர் மறைவில் இருந்து வந்த ஒற்றை ஆண் யானை வனத்துறையினர் சென்ற ஜிப்பை தந்தத்தால் குத்தி தள்ளியது. இதில் வனத்துறையினர் சென்ற ஜீப் தலைகீழாக கவிழ்ந்தது.
யூடியூப்பை மட்டும் பார்த்து நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கூலித்தொழிலாளியின் மகன்
இந்த விபத்தில் இரண்டு பேர் லேசான காயமடைந்தனர் இதனை அடுத்து அவர்கள் கூச்சல் இட்டதால் அந்த யானை அங்கிருந்து வெளியேறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து ஜிப்பில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படாமல் நூலிழையில் உயிர் தப்பினர். இதனை அடுத்து சிறுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். கோவையில் காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறையினர் யானை தாக்கியதில் காயமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.