யூடியூப்பை மட்டும் பார்த்து நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கூலித்தொழிலாளியின் மகன்

புத்தகம் வாங்க பணம் இல்லாத நிலையிலும், யூடியூப் மட்டுமே பார்த்து கூலித் தொழிலாளியின் மகன் புதுச்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

daily wager son who topped in pudukkottai district in neet exam by just watching youtube only

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி தம்பதியினரின் மகன் அறிவு நிதி. விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில்  525 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். 

அப்பா மற்றும் அம்மா ஆகிய இருவரும் கூலித்தொழில் வேலைக்கு சென்று வருவதால் புத்தகம் கூட வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் தவித்து வந்த மாணவன் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்பில் நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி 11ம் வகுப்பிலிருந்து ஆர்வம் கொண்டு படித்து வந்துள்ளான்.

ஐஎப்எஸ் நிதி நிறுவன முறைகேடு; ரூ.550 கோடி வசூல் செய்து கொடுத்த காவல் அதிகாரி கைது

தற்போது 348 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாக நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தன் தந்தை மற்றும் தாயாரின் கனவை நிறைவேற்றிய அறிவுநிதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

daily wager son who topped in pudukkottai district in neet exam by just watching youtube only

புத்தகம் வாங்க கூட காசு இல்லை என்று காரணம் காட்டாமல் யூட்யூபில் படித்து வெற்றி பெற்றுள்ள மாணவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவரது தந்தை பேசுகையில் என் பிள்ளை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படிப்புக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்

இது பற்றி அந்த மாணவனிடம் பேசுகையில் நான் பயாலஜி மற்றும் படித்து வெற்றி பெற்றுள்ளேன் இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios