பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு எது? புதிதாக இடம் பெறும் விளையாட்டுகள் என்னென்ன்?

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் முதல் முறையாக பிரேக் டான்ஸ் (BREAKING - Break Dancing) போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Which sport has been introduced in Paris 2024 Olympics? What are the new placement games? rsk

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 1964 ஆம் ஆண்டிற்கு பிறகு கோடைகாலம் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் என்று இரண்டாக பிரித்து ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியா சார்பில் 124 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்று மொத்தமாக 7 பதக்கங்கள் மட்டுமே கைப்பற்றி 48ஆவது இடம் பிடித்திருந்தது. இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 66 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனகள் உள்பட 113 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.

முதன் முதலில் ஒலிம்பிக்கில் இந்தியா எப்போது பங்கேற்றது? இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தவர் யார்?

ஒலிம்பிக் 2024 இடம் பெறும் விளையாட்டுகள்:

இந்த ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, பீச் வாலிபால், குத்துச்சண்டை, கேனோ, சைக்கிளிங் (ரோடு, டிராக், மவுண்டைன் பைக்), டைவிங், குதிரையேற்றம், ஃபென்சிங் (கத்தி சண்டை), கால்பந்து, கோல்ஃப், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மராத்தான் நீச்சல், மாடர்ன் பெண்டாத்லான், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரோயிங், ரக்பி செவன்ஸ், படகோட்ட போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிராம்போலின், டிரையத்லான், வாலிபால், தண்ணீர் பந்தாட்ட போட்டி, பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த ஆகிய விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2024 அறிமுகம் செய்யப்படும் விளையாட்டு:

இது தவிர இந்த ஆண்டின் முதல் முறையாக பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போடுவார்கள். அதாவது, பாரிஸ் விளையாட்டு போட்டிகளில் ஒரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்களுக்கான போட்டிகள் இடம் பெறும். 16 பி பாய்ஸ் மற்றும் 16 பி கேர்ல்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதுவார்கள். இது டிஜேயின் துடிப்பை மேம்படுத்த உதவும்.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கிடைத்த மருந்து – 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய லியோனல் மெஸ்ஸி!

இது கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது முதல் முறையாக முதன்மை ஒலிம்பிக் மேடையில் இடம் பெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக்கிங் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அமெரிக்கர் விக்டர் மாண்டால்வோ ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெறும் புதிய விளையாட்டுகள்:

சர்ஃபிங் (கடலில் நடத்தப்படும் நீர் விளையாட்டு), ஸ்கேட்போர்டிங், ஏறு விளையாட்டு ஆகிய விளையாட்டு போட்டிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், ஏறு விளையாட்டு ஆகியவை கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wimbledon: விம்பிள்டன் 2024: தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாதனை!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இடம் பெறாத போட்டிகள்:

இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்பால், சாஃப்ட்பால், கராத்தே ஆகிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டில் இடம் பெறவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios