கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கிடைத்த மருந்து – 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய லியோனல் மெஸ்ஸி!
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பாதியிலேயே வெளியேறிய லியோனல் மெஸ்ஸி 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரானது அமெரிக்காவின் மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது இன்று வரை நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதின. இன்று காலை 5.30 மணிக்கு தொடங்க இருந்த போட்டியானது மைதானத்திற்கு தாமதமாக வந்த ரசிகர்களால் தாமதமாக தொடங்கப்பட்டது.
போட்டி நேரத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. முதல் அரை மணி நேரத்தில் எந்த கோலும் அடிக்கவில்லை. இதே போன்று 2ஆவது அரைமணி நேரத்திலும் கோல் அடிக்கவில்லை. கடைசியாக 90 நிமிடங்கள் வரையில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அப்படி கொடுத்தும் முதல் 15 நிமிடங்கள் வரையில் கோல் அடிக்கப்படவில்லை. எனினும், கடைசி 15 நிமிடங்களில் இரு அணிகளும் கடுமையாக போராடின. அப்போது தான் அர்ஜென்டினா வீரர் லாடாரோ மார்டினஸ் ஒரு கோல் அடிக்கவே அர்ஜெண்டினா 1-0 என்று முன்னிலை வகித்தது. இந்த தொடரில் மார்டினஸ் அடித்த 5ஆவது கோல் இதுவாகும். இதன் காரணமாக கோல்டன் பூட் (தங்க காலணி) விருது வென்றார்.
முகேஷ் குமார் வேகத்தில் 125 ரன்களுக்கு சரண்டரான ஜிம்பாப்வே –4-1 என்று தொடரை கைப்பற்றிய இந்தியா!
கடைசியில் 120 நிமிடங்கள் முடிந்த நிலையில், கொலம்பியா அணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், அர்ஜெண்டினா 1-0 என்று வெற்றி பெற்று தொடர்ந்து 2ஆவது முறையாக டிராபி வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, 1921, 1925, 1927, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993, 2021, 2024 என்று 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியின் 66ஆவது நிமிடத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி போட்டியிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக நிகோ கோன்சாலஸ் மாற்று வீரராக களமிறங்கினார்.
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மறைவு!
மேலும், டக் அவுட்டில் கண்ணீருடன் காணப்பட்டார். எனினும், அணி வீரர் மார்டினஸ் அடித்த கோலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். அதோடு, தொடர்ந்து 2ஆவது முறையாக டிராபியை வென்று அசத்தினார். இந்த டிராபியோடு மெஸ்ஸி 45ஆவது முறையாக டிராபியை வென்று சாதனை படைத்துள்ளார். இது மெஸ்ஸியின் 4ஆவது சர்வதேச டிராபி ஆகும். இந்த தொடருடன் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Copa America 2024 Final: காயம் காரணமாக வெளியேறிய மெஸ்ஸி – 16ஆவது முறையாக சாம்பியனான அர்ஜெண்டினா!