Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரு 26 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியுடன் அணி வகுப்பு நடத்த உள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 1994 ஆம் ஆண்டிற்கு பிறகு கோடைகாலம் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் என்று இரண்டாக பிரித்து ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை.
இதையடுத்து தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26 ஆம் தேதி 33ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய நாட்டிலிருந்து வில்வித்தை, குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன், கோல்ஃப், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, ஹாக்கி என்று பல போட்டிகள் மூலமாக 66 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 113 பேர் கலந்து கொள்ளா இருக்கின்றனர்.
வரும் 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் ஒலிம்பிக் தொடரானது வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் இந்திய குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணம் காரணமாக மேரி கோம் அந்த பதவியை ராஜினாமா செய்த நிலையில், ககன் நரங் பாரிஸ் ஒலிம்பிக் இந்திய குழுவிற்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவிற்கு வெணகலம் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி உஷா கூறியிருப்பதாவது: மேரி கோம் ராஜினாமா செய்த பிறகு இந்திய குழுவிற்கு துணை தலைவராக இருந்த ககன் நரங்கை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாரிஸ் ஒலிம்பிக் இந்திய குழுவை வழிநடத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை தேடிக் கொண்டிருந்தோம். அதற்கு ககன் நரங் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறியுள்ளார்.