முதன் முதலில் ஒலிம்பிக்கில் இந்தியா எப்போது பங்கேற்றது? இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தவர் யார்?

இந்தியா முதன்முதலில் 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றது. அப்போது இந்தியா சார்பில் ஒரே தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட் தடகளத்தில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று கொடுத்தார்.

When did India participate in Olympics for the first time and Who won the medal for India? rsk

முதல் முதலாக 1900 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. இதில் ஒரே ஒரு வீரர் மட்டுமே இந்தியா சார்பில் பங்கேற்றார். அதுவும், தடகள வீரர். நார்மன் பிரிட்சார்ட் என்ற தடகள வீரர் இந்தியா சார்பில் பங்கேற்று இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்தார். அதோடு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியா அப்போது பெற்றது.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

கடந்த 1947 வரை பிரிட்டிஷ் ஆட்டி காலத்தில் இந்தியா இருந்த போதிலும், கூட இந்தியா தனியாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. அப்படி தான் முதல் முறையாக 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றது. ஆனால் இந்திய அணி 1920 வரை கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தான் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கிற்கு ஒரு டீமை இந்தியா அனுப்பியது. இதில் இந்தியா சார்பில் 6 தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஆனால், ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை. இதற்கு முன்னதாக 1904, 1908 மற்றும் 1912 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கிடைத்த மருந்து – 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய லியோனல் மெஸ்ஸி!

1920 ஆம் ஆண்டிறகு பிறகு ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்று விளையாடியது. 1924, 1928, 1932, 1936 ஆம் ஆண்டு வரை இந்தியா பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து விளையாடியாது. அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரத்திற்கு 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

இதே போன்று 1964ல் தொடங்கி இந்தியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்தியா விளையாடிய 24 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 35 பதக்கங்களை வென்றுள்ளது. இதில், 10 தங்கம், 9 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கம் அடங்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 114 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.

Wimbledon: விம்பிள்டன் 2024: தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாதனை!

நடப்பு ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் பாரிஸில் தொடங்குகிறது. வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 66 வீரர்கள், 47 வீராங்கனகள் உள்பட 113 பேர் கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.

முகேஷ் குமார் வேகத்தில் 125 ரன்களுக்கு சரண்டரான ஜிம்பாப்வே –4-1 என்று தொடரை கைப்பற்றிய இந்தியா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios