ஒட்டுமொத்த உலகத்திலும் இந்தியாவில் தான் கிரிக்கெட்டுக்கு 90 சதவீதம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி வந்தபிறகு டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி  உள்ளது என்று கிரிக்கெட்டி இருப்பவர்களே கூட  குழம்பி வருகின்றனர்.

ஆனால், பின்வரும் இந்த முடிவை பாத்தால் இந்தியா இருக்கும்வரை கிரிக்கெட் இருக்கும் என்று தான் தோன்று.

ஆம். உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதை அறிய சர்வதேச கிரிக்கெட் குழு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், 12 கிரிக்கெட் உறுப்புகள் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் நடந்தப்பட்ட ஆய்வில் 100 கோடிக்கும் மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதில் இந்தியா ரசிகர்கள் 90 சதவீதம் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 16 வயதில் இருந்து 69 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பதுதான் இதில் முக்கியமானது. இதில் 39 சதவிகிதம் பெண் ரசிகைகள் என்பது கூடுதல் தகவல்.

34 வயதை சராசரியாக கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் 30 கோடி பங்கேற்பாளர்களாக உள்ளனர் . மேலும் இந்த ஆய்வில் 32 சதவீதம் பேர் பெண்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். 70 சதவீதம் டிவியில் மகளிர் கிரிக்கெட்டை ஒளிபரப்ப கேட்கிறார்கள். 87 சதவீதம் பேர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவும் வலியுறுத்துகிறார்கள். இதில் 90 சதவிகித்தினர் துணைக் கண்ட ரசிகர்கள்.

சீனா, அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பதுதான்  அதிரடியே.