உசேன் போல்ட், கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 தூதராக யுவராஜ் சிங் நியமனம்!
ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
Yuvraj Singh
இந்தியாவின் வெற்றிகரமான டி20 உலகக் கோப்பை 2007 தொடரின் போது ஒரு ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்களைக் கொண்டாட இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Yuvraj Singh
முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஸ்டூவர் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
Yuvraj Singh
பின்னர் விளையாடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி ஒரு முறை கூட டிராபியை வென்றதில்லை.
ICC Men’s T20 World Cup 2024
இந்த நிலையில் தான் வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் பிராண்ட் அம்பாஸிடராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி, கிறிஸ் கெயில் மற்றும் 8 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற உசேன் போல்ட் ஆகியோரும் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ICC Men’s T20 World Cup 2024
இது குறித்து யுவராஜ் சிங் கூறியிருப்பதாவது: ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையிலிருந்து என்னுடைய மறக்க முடியாத நினைவுகள் வந்துள்ளன. ஆகையால், இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது.
Yuvraj Singh
மேலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சிறந்த இடம். உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான தாக்கத்தை இது உருவாக்குகிறது. மேலும், அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. மேலும், அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Yuvraj Singh
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. ஒட்டு மொத்த உலக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது இந்த ஒரு போட்டிக்கு தான். உலகின் சிறந்த வீரர்கள், இந்த புதிய மைதானத்தில் விளையாடுவதை பார்ப்பது ஒரு பாக்கியம் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.