2ஆவது முறையாக சித்தப்பாவான ஹர்திக் பாண்டியா; குர்ணல்– பன்குரி சர்மாவுக்கு 2ஆவது ஆண் குழந்தை பிறந்தது!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வீரர் குர்ணல் பாண்டியா மற்றும் பன்குரி சர்மாவுக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர் குர்ணல் பாண்டியா. கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அகமதாபாத் மாநிலம் குஜராத்தில் பிறந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற குர்ணல் பாண்டியா 5 ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 130 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், 174 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 2253 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மாடலான பன்குரி சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கவிர் குர்ணல் பாண்டியா என்ற மகன் பிறந்தான். இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 2ஆவது ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர். மேலும், 2ஆவது ஆண் குழந்தைக்கு வயு (Vayu) என்று பெயரிட்டுள்ளனர்.