Asianet News TamilAsianet News Tamil

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் காதல் திருமணம்… அவர் கல்யாணம் செய்யப் போவதும் ஒரு பிரபலம்தான் !!

இந்தியாவின்  முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது காதலரும், பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பை மணக்கிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 16  ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

saina newal love marriage with kashyab
Author
Hyderabad, First Published Sep 27, 2018, 7:53 AM IST

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும், ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்த காதல் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள்.

saina newal love marriage with kashyab

சாய்னா நேவால்–காஷ்யப் திருமணத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களது திருமணம் டிசம்பர் 16–ந் தேதியும், அதைத்தொடர்ந்து பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு டிசம்பர் 21–ந் தேதியும் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

saina newal love marriage with kashyab

சாய்னா நேவால் 2015–ம் ஆண்டில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2015–ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2017–ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2010 மற்றும் இந்த ஆண்டில் தங்கப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.

saina newal love marriage with kashyab

காஷ்யப் உலக தரவரிசையில் அதிகபட்சமாக 6–வது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும் 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios