முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 8 போட்டிகள் முடிவில் விளையாடிய 8 போட்டிகளில் முதல் முறையாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் சாதனை படைத்துள்ளது.
Rajasthan Royals, IPL 2024
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக விளையாடி வருகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் எல்லோருமே நிபுணர்கள் தான். எப்படி என்றால், எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள், எந்த அணி டிராபியை வெல்லும், எந்த வீரர் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுப்பார் என்பது குறித்து கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
RR, IPL 2024
ஆனால், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பாக விளையாடி 8 போட்டிகளில் 7ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றும் உறுதியாகிவிட்டது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Rajasthan Royals
ஏனென்றால் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், குறைந்தது 14 முதல் 16 புள்ளிகள் வரை பெற்றிருக்க வேண்டும்.
Rajasthan Royals
தற்போது ராஜஸ்தான் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2, 3 மற்றும் 4ஆம் இடங்களை பிடித்துள்ளன.
IPL 2024, Rajasthan Royals
இந்த நிலையில், கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த 8 போட்டிகளின் முடிவுகளின் படி, விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஆண்டு படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் 8ல் 7 போட்டிகளில் வெற்றி பெற்றது.
Rajasthan Royals, IPL 2024
இதே போன்று 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.