Asianet News TamilAsianet News Tamil

புரோ கபடி லீக்: பரபரப்பான போட்டியில் புனேரி பல்தானை வீழ்த்தி யு மும்பா த்ரில் வெற்றி

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் புனேரி பல்தானை 34-33 என வீழ்த்தி யு மும்பா அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

pro kabaddi league 2022 u mumba thrill win against puneri paltan
Author
First Published Nov 11, 2022, 10:14 PM IST

புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த டபாங் டெல்லி அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவியதன் விளைவாக 5ம் இடத்தில் உள்ளது.

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கு 9 வீரர்களை பட்டியலிட்ட ஐசிசி..! ரசிகர்களே தேர்வு செய்யலாம்

இன்று புனேவில் நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய யுபி யோதாஸ் அணி 40-34 என ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் புனேரி பல்தான் மற்றும் யு மும்பா ஆகிய 2 வலுவான அணிகளும் மோதின. மிக பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் போட்டி போட்டு புள்ளிகளை பெற்றன. கடைசியில் 34-33 என த்ரில் வெற்றி பெற்றது யு மும்பா அணி.

இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலா அவரை நியமிக்கணும்! ஹர்பஜன் சிங் அதிரடி

இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் புனேரி பல்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு புல்ஸ் 2ம் இடத்திலும்,  யு மும்பா அணி 3ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios