இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலா அவரை நியமிக்கணும்! ஹர்பஜன் சிங் அதிரடி

டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசகராக டி20 கிரிக்கெட்டை பற்றி நன்கறிந்த, சமீபத்தில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு வீரரை நியமிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

harbhajan singh opines ashish nehra should be appointed as mentor of team india for t20 cricket

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறின. டி20 உலக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தொடரை விட்டு வெளியேறி ஏமாற்றமளித்தன. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றால் 2048ல் பாபர் அசாம் பிரதமர் ஆகிவிடுவார் - சுனில் கவாஸ்கர்

இந்த உலக கோப்பையில் பும்ரா, ஜடேஜா ஆகிய இருபெரும் மேட்ச் வின்னர்கள் காயத்தால் ஆடாதது பெரும் பாதிப்பாக அமைந்தது. அதையும் மீறி இந்திய அணி ஜொலித்திருக்கலாம். ஆனால் தவறான அணி தேர்வு தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய அஷ்வினை நீக்கிவிட்டு ரிஸ்ட் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்கும் வியூகத்தை இந்திய அணி தவறவிட்டுவிட்டது என்பது ரசிகர்கள் மட்டுமல்லாது சில முன்னாள் வீரர்களின் ஆதங்கமாகவும் உள்ளது. அதேபோல ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஆடவைத்ததும் சரியான முடிவல்ல.

இப்படியாக அணி தேர்வு, திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய விஷயங்களில் சொதப்பி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இந்திய அணி தோற்றது கூட பெரிய பிரச்னையில்லை. ஆனால் இங்கிலாந்திடம் தோற்ற விதம் படுமோசமானது. இங்கிலாந்தின் முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்திய அணியின் தோல்விக்கு பின் டி20 கிரிக்கெட்டை இந்திய அணி அணுக வேண்டிய முறையை மாற்றவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். 

2011 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஒண்ணும் சாதிக்கல..! மொக்கை டீமா இருக்காங்க.. மைக்கேல் வான் கடும் தாக்கு

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், இது கேப்டன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. டி20 கிரிக்கெட்டை பற்றி நன்கறிந்த, டி20 கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற ஒருவரை பயிற்சியாளர் குழுவில் சேர்க்க வேண்டும். ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருடன் இணைந்து நிறைய ஆடியிருக்கிறேன். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர். அவரை டி20 அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டாம் என்று நினைத்தால், டி20 கிரிக்கெட்டை பற்றி நன்கறிந்த ஆஷிஷ் நெஹ்ரா மாதிரியான ஒருவரை ஆலோசகராக நியமிக்கலாம். ஆஷிஷ் நெஹ்ரா குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி அந்த அணி களமிறங்கிய முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லவைத்தார். எனவே அவரை ஆலோசகராக நியமித்தால் இளம் வீரர்களுக்கு பெரிய உத்வேகமாக இருப்பார்.  டி20 அணியின் கேப்டன்சிக்கு எனது தேர்வு ஹர்திக் பாண்டியா என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios