டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கு 9 வீரர்களை பட்டியலிட்ட ஐசிசி..! ரசிகர்களே தேர்வு செய்யலாம்
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த 9 பேருக்கும் ரசிகர்கள் வாக்களித்து தொடர் நாயகனை தேர்வு செய்யலாம்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. வரும் 13ம் தேதி மெல்பர்னில் இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்த டி20 உலக கோப்பையின் தொடர் நாயகனை ரசிகர்களே தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது ஐசிசி. அதற்காக இந்த தொடரில் சிறப்பாக ஆடிய, தொடர் நாயகன் விருதுக்கு தகுதியான 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. T20 World Cup இணையத்தில் வீரர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதில் அதிக வாக்குகளை பெற்றவர் தொடர் நாயகன் விருதை வெல்வார்.
இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலா அவரை நியமிக்கணும்! ஹர்பஜன் சிங் அதிரடி
தொடர் நாயகன் விருதுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா 2 வீரர்கள், அதிகபட்சமாக இங்கிலாந்தீலிருந்து 3 வீரர்கள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வீரர் ஒருவர் என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது.
இந்த டி20 உலக கோப்பையில் 4 அரைசதங்களுடன் அதிக ரன்களை குவித்த விராட் கோலி(296 ரன்கள் ஃபைனலுக்கு முன்வரை) மற்றும் சூர்யகுமார் யாதவ் (239 ரன்கள்) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய 2 பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஆகியோரும் தொடர் நாயகனுக்கான பட்டியலில் உள்ளனர்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றால் 2048ல் பாபர் அசாம் பிரதமர் ஆகிவிடுவார் - சுனில் கவாஸ்கர்
இவர்களில் யார் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று ரசிகர்கள் நினைக்கின்றனரோ, ரசிகர்களே வாக்களித்து தேர்வு செய்யலாம்.