மலேசியாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா ஹாக்கி டீம்!
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி தொடரின் நேற்று நடந்த 3ஆவது போட்டியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி தொடர் கடந்த 3 ஆம் தேதி சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று 3 போட்டிகள் நடந்தது. இதில், முதல் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்தப் போட்டியானது 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் 3-3 என்று கோல் அடிக்கவே இந்தப் போட்டி டிரா ஆனது. இதன் மூலமாக இரு அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4ஆவது இடமும், பாகிஸ்தான் 5ஆவது இடமும் பெற்றுள்ளன.
அவசரப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்; ஆறுதல் கொடுத்த திலக் வர்மா!
இதையடுத்து நேற்றைய கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில், மலேசியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு கோலாக அடித்தனர். போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் அரியலூர் வீரர் கார்த்தி செல்வம் ஒரு கோல் அடித்தார்.
குல்தீப் யாதவ்விற்கு காயம்; ரவி பிஷ்னாய்-க்கு வாய்ப்பு; இந்தியா பேட்டிங்!
இதையடுத்து அடுத்த 17 ஆவது நிமிடத்தில் ஹார்திக் சிங் ஒரு கோல் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் (அடுத்த 10 ஆவது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். குர்ஜண்ட் சிங் 53 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, அடுத்த நிமிடத்தில் ஜக்ராஜ் சிங் கோல் அடித்தார். எனினும் இந்திய வீரர்கள் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோட்டைவிட்டனர். இதன் மூலமாக இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தியது. அதோடு புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!
- Asian Champions Trophy
- Asian Champions Trophy 2023
- Asian Champions Trophy 2023 hockey
- Asian Champions Trophy hockey
- China vs Malaysia
- China vs South Korea
- Gurjant Singh
- Hardik Singh
- Harmanpreet Singh
- Hockey
- India
- India vs Japan
- India vs Malaysia
- Jugraj Singh
- Karthi Selvam
- Korea vs Pakistan
- Malaysia vs India
- Team India