WI vs IND 2nd T20: வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: பவுலர்கள் அடித்து கொடுக்க கடைசில வெற்றி பெற்ற வெ.இ!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது கயானாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். இது அவரது முதல் சர்வதேச அரைசதம் ஆகும். இஷான் கிஷான் 27, ஹர்திக் பாண்டியா 24, அக்ஷர் படேல் 14 ரன்கள் எடுத்தனர்.
அவசரப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்; ஆறுதல் கொடுத்த திலக் வர்மா!
இந்தியா:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், ரவி பிஷ்னாய்.
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவால் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரோமாரியோ ஷெப்பார்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசப், ஒபேட் மெக்காய்
குல்தீப் யாதவ்விற்கு காயம்; ரவி பிஷ்னாய்-க்கு வாய்ப்பு; இந்தியா பேட்டிங்!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டிலும் மற்றும் கைல் மேயர்ஸ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜான்சன் சார்லஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரே ஓவரில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஒருபூரம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 67 பவுண்டரிகள் உள்பட 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரோவ்மன் பவால் 21 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மயர் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ரோமாரியோ ஷெப்பர்டு ஒரு பந்து கூட பிடிக்காமல் ரன் அவுட் செய்யப்பட்டார்.
அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!
இறுதியாக வந்த அக்கீல் ஹூசைன் மற்றும் அல்சாரி ஜோசப் இருவரும் இணைந்து ரன்கள் சேர்க்க கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்தியா 2ஆவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு வரிசையாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி நாளை 8ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தப் போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடக்க இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.