- Home
- Sports
- Sports Cricket
- செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
India vs Zimbabwe Semifinal Qualification Scenarios : அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் ரன் ரேட்டை அதிகரிக்க இந்தியா பின்பற்ற வேண்டிய உத்திகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர்-8
டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி சிக்கலான நிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி, அரையிறுதி வாய்ப்பை பாதித்துள்ளது. இதனால் இந்தியாவின் நெட் ரன் ரேட் -3.800 ஆக சரிந்துள்ளது.
IND vs ZIM
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. ரன் ரேட்டை அதிகரிக்க இந்தியா பின்பற்ற வேண்டிய உத்திகள் உள்ளன. ரன் ரேட்டை மேம்படுத்தினால் மட்டும் போதாது, மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டும்.
நெட் ரன் ரேட்
ஜிம்பாப்வேயை குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். உதாரணமாக, ஜிம்பாப்வே 150 ரன்கள் எடுத்தால், இந்தியா அந்த இலக்கை 11 ஓவர்களில் முடிக்க வேண்டும். அப்போதுதான் நெட் ரன் ரேட் பாசிட்டிவ்வாக மாறும்.
220-250 ரன்கள்
முதலில் பேட்டிங் செய்தால், ரன் ரேட்டை உயர்த்துவது சவாலானது. இந்தியா 220-250 ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வேயை 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இது ரன் ரேட்டை கணிசமாக உயர்த்த உதவும்.
தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளன. இந்தியா அடுத்த 2 போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். ரன் ரேட் குறைந்தால், அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். இந்த வாழ்வா சாவா போட்டியில் சூர்யகுமார் யாதவ் அண்ட் கோ வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.