அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!
ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி டிராபி தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி தனது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னையில் 7ஆவது ஆசிய ஆண்களுக்கான ஹாக்கி டிராபி தொடர் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
சென்னையில் தொடங்கிய ஹாக்கி டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன்னதாக அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி தனது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தியது.
IPL Rohit Sharma: ஐபிஎல் தொடர் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
இதையடுத்து 4 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா 1-1 என்று கோல் போடவே போட்டியானது டிரா செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடத்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென் கொரியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், 6.15 மணிக்கு நடக்கும் போட்டியில் சீனா மற்றும் மலேசியா அணிகளும் இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளும் மோதுகின்றன.
WI vs IND 2nd T20: கயானா யாருக்கு சாதகம்? இந்தியாவிற்கு வாய்ப்பு இருக்கா?