குல்தீப் யாதவ்விற்கு காயம்; ரவி பிஷ்னாய்-க்கு வாய்ப்பு; இந்தியா பேட்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

India Won the Toss and choose to bat first against West Indies in 2nd T20 Providence Stadium, Guyana

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது கயானாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் பயிற்சியின் போது குல்தீப் யாதவ்விற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ரவி பிஷ்னாய் அணியில் இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டிராவில் முடிந்த தென் கொரியா – சீனா போட்டி: புள்ளிப்பட்டியலில் சீனாவுக்கு கடைசி இடம்!

இந்தியா:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், ரவி பிஷ்னாய்.

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவால் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரோமாரியோ ஷெப்பார்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசப், ஒபேட் மெக்காய்

அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் புரோவிடான்ஸ் மைதானத்தில் 11 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் ஆடிய அணி 4 முறையும், சேஸ் செய்த அணி 4 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு அணி கூட 200 ரன்களுக்கு மேல் ரன்கள் குவிக்கவில்லை. கடந்த 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணியின் ரன்கள் முறையே 146, 157, 163 ரன்கள் ஆகும்.

Asian Champions Trophy 2023: ஒரே நாளில் 3 போட்டிகள்: இரவு 8.30 மணிக்கு இந்தியா – ஜப்பான் பலப்பரீட்சை!

இந்த மைதானம் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக உள்ளது. ஆதலால், பேட்ஸ்மேன்களால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் 27 டி20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய அணி 13 முறையும், 2ஆவது ஆடிய அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 122, 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 93. இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 194 ஆகும். குறைந்தபட்ச ரன்கள் 46. சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் 169 ஆகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios