உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் கெளரவ் பிதுரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் கெளரவ் பிதுரி தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் கிர்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றது.

அந்தப் போட்டியின்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார் கெளரவ் பிதுரி.

இந்த நிலையில் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் பூடான் சார்பில் யாரும் அனுப்பப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்துக்கு கெளரவ் பிதுரி தகுதிப் பெற்றுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பை இழந்தாலும், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிதுரியை தேடி வந்துள்ளது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியை தவறவிட்டு செய்த தவறை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் செய்யமாட்டார் என்று நம்புவோம்.