Asianet News TamilAsianet News Tamil

கோலியின் செல்லப் பிள்ளையை சாதியை குறிப்பிட்டு விமர்சித்த யுவாராஜ் சிங்…. கைதாகி 3 மணி நேரத்தில் விடுதலை..!

வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜரான யுவராஜ் சிங்கிடம் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீஸார் இறுதியில் அவரை கைது செய்தனர்.

Former cricketer yuvaraj singh arrested for caste remarks against bowler
Author
Punjab, First Published Oct 18, 2021, 11:50 AM IST

வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜரான யுவராஜ் சிங்கிடம் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீஸார் இறுதியில் அவரை கைது செய்தனர்.

சிக்சர் மன்னன், உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கபப்டுபவர் யுவராஜ் சிங். இவர், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் சக வீரர்களோடு நேரடி ஒளிபரப்பு ஒன்றில் உரையாடினார். அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளரும், கேப்டன் கோலியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் யுகேந்திர சாஹல் குறித்து சாதியை குறிப்பிட்டு யுவராஜ் சிங் பேசியதாக புகார் எழுந்தது.

Former cricketer yuvaraj singh arrested for caste remarks against bowler

யுவராஜ் சிங் பேச்சுக்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தமது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்த யுவராஜ் சிங், அப்படி பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தார். ஆனாலும் யுவராஜ் சிங்கின் பேச்சு தலித்துகளின் மனதை புண்படுத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபப்ட்டது. இந்த புகாரில் யுவராஜ் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Former cricketer yuvaraj singh arrested for caste remarks against bowler

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்றைய தினம் யுவராஜ் சிங் காவல் நிலையத்திற்கு சென்றார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் இறுதியில் அவரை கைது செய்தனர். ஏற்கெனவே நீதிமன்றம் கூறியபடி யுவராஜ் சிங், மன்னிப்பு கோரியிருந்ததால் அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே யுவராஜ் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அவர் மீது புகார் தெரிவித்த தலித் அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios