பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். இன்று மும்பையில் இருக்கும் அலுவகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் மற்ற பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தோனியிடம் திட்டங்கள் குறித்து தனக்கு தெரியாது என்ற அவர், தோனியின் சாதனைகள் இந்தியாவை பெருமையடைய வைப்பதாக குறிப்பிட்டார். சாம்பியன் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தான் பதவியில் இருக்கும் வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

நாளை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பேச இருப்பதாக கூறிய கங்குலி, இந்திய கேப்டன் என்பதால் அவர் மிக முக்கியமானவர் என்றார். சிறந்த வீரரான கோலி, இந்திய அணியை நல்ல இடத்திற்கு உயர்த்தி இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:  ஆட்டத்தை தொடங்கினார் தாதா..! இனி அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது..!